×

போக்குவரத்து விதிமீறி அபராதம் செலுத்தாமல் இருந்த 15 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு ரூ.90.52 லட்சம் அபராதம் வசூல்: போக்குவரத்து போலீஸ் அதிரடி

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி அபராதம் செலுத்தாமல் நிலுவையில் இருந்த 15 ஆயிரம் வழக்குகள் கடந்த ஒரு மாத்தில் தீர்வு காணப்பட்டு, ரூ.90.52 லட்சம் அபராதமாக போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து விதிமீறி வாகனம் ஓட்டும் நபர்கள்மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது தினசரி சராசரியாக 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள், அபராத தொகைக்கான ரசீதை போக்குவரத்து போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு, அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்துவதாக கூறிவிட்டு செல்கின்றனர். ஆனால், அதன்படி அபராத ெதாகையை செலுத்துவதில்லை. எனவே, நிலுவையில் உள்ள அபராத தொகையை வசூலிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 10 போக்குவரத்து கால்  சென்டர்கள் மூலம் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளை செல்போனில் அழைத்து, அபராத தொகையை வசூலித்து,  வழக்குகளை முடித்துவைத்து வருகின்றனர்.அந்த வகையில், நிலுவையில் உள்ள போக்குவரத்து வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் மாநகரம் முழுவதும் 166 இடங்களில் போக்குவரத்து போலீசார் சிறப்பு முகாம் நடத்தினர். அதில், போக்குவரத்து விதிகளை மீறி அபராதம் செலுத்தாமல் நிலுவையில் இருந்த 5,336 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.61,70,420 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல், மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் 159 இடங்களில் சிறப்பு தணிக்கை முகாம் நடத்தப்பட்டது. அதன் மூலம் நிலுவையில் இருந்த 9,523 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதமாக ரூ.28,82,270 வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் நிலுவையில் இருந்த 14,859 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதமாக 90 லட்சத்து 52 ஆயிரத்து 690 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம் இனி வரும் நாட்களிலும் தொடரும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்….

The post போக்குவரத்து விதிமீறி அபராதம் செலுத்தாமல் இருந்த 15 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு ரூ.90.52 லட்சம் அபராதம் வசூல்: போக்குவரத்து போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...