×

வெளிநாட்டு நிதியுதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது: மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதிப்பு..!!

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறக்கூடிய இந்தியாவில் செயல்படக்கூடிய தனியார் தொண்டு நிறுவனங்கள், அந்த தொகையினை முழுமையாக பயன்படுத்தாமல் தவறான செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது அதற்கு நிரந்தர தீர்வினை வழங்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. நிதியுதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.

கட்டுப்பாடுகள்:

* வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கோரும் தனியார் தொண்டு நிறுவனம், 3 ஆண்டுகள் செயல்பட்டதாக இருக்க வேண்டும்.

* கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூபாய் 15 லட்சம் நலத்திட்டங்களுக்காக செலவு செய்திருக்க வேண்டும்.

* வெளிநாட்டு நிதியுதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது.

* கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், வெளிநாட்டு நிதியுதவியை பெற முடியாது.

* ஒவ்வொரு தனியார் தொண்டு அமைப்பும் நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பிக்க தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளிநாடு நிதியுதவியை  பெறுவதற்கு பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள்., எம்.பி.க்கள் ஆகியோருக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சங்கங்கள், அமைப்புகளும் இந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


Tags : organizations , Foreign funding, organization, struggle, central government, regulation
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...