தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: கமல் ட்வீட்

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சவுகார்பேட்டையில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை நடத்தியதில் சொத்து தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலையாளிகள் சென்னையை விட்டு வெளியேறி விடாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் வடமாநிலத்தில்  தான் சாதாரணமாக நடைபெறும். தற்போது சென்னையில் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>