×

உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்த பஹ்ரைன் பிரதமர் காலமானார்...!! ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிப்பு

அமிரகம்; உலகின் மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார் என அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஹ்ரைன் பிரதமர், காலமானதாக, அந்நாட்டு அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு வயது 84. பஹ்ரைன் பிரதமர் காலமானதையடுத்து, ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து உடல் சொந்த வீட்டிற்கு வந்த பின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலம் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் உறவினர்கள் கலந்து கொள்ளவார்கள் என கூறப்படுகிறது.

உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவராக விளங்கியவர் பஹ்ரைன் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா நவம்பர் 24, 1935-ம் ஆண்டு பிறந்தவர். பஹ்ரைன் இளவரசர் மற்றும் அரசியல்வாதியாகவும் இருந்து வந்தார். ஆகஸ்ட் 15, 1971 பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Bahrain , Bahrain's longest-serving prime minister has died. One week government system mourning adjustable
× RELATED பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு 9...