×

திருவிழாக்களை விட மக்கள் உயிர் முக்கியம்...!! பட்டாசு தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: உயிர்களை பாதுகாப்பதை விட வேறெதுவும் முக்கியமானதாக இருக்க முடியாது என்று பட்டாசுக்கு தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்துள்ளது. பட்டாசு டீலர் சங்கத்தின் கௌதம் ராய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தீபாவளி முக்கியமானது என்றாலும் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்து வருகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் வரும் பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்ததுடன், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த திருவிழாக்கள் முக்கியம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது, காப்பாற்ற அனைத்து முயற்சியும் செய்யவேண்டும். நாம் தொற்றுநோய்களுக்கு மத்தியில் வாழும் இந்த சூழ்நிலையில், நிலைமையை மேம்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள இந்த முடிவை அனைவரும் ஆதரிக்க முன்வர வேண்டும்’ என்று நீதிபதி கேட்டுக்கொண்டார்.


Tags : festivals ,Supreme Court , People's lives are more important than festivals ... !! The Supreme Court dismissed the petition against the ban on fireworks
× RELATED கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம்...