×

மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தியதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்துள்ளது: முதல்வர் பழனிச்சாமி

தூத்துக்குடி: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்டம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தியதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் 150 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கோவில்பட்டியில் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 4.32 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரிநீரை ரூ.262 கோடி மதிப்பில் வைப்பேரிக்கு கொண்டு செல்லப்படும். பெற்றோர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


Tags : spread ,Corona ,Palaniachai ,fever camps ,districts , Corona, CM, Palanichamy
× RELATED வரும் 1ம் தேதி முதல் தென்மாவட்ட...