வேல் யாத்திரை பாஜ தலைவர் முருகன் ஓசூரில் கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் காமராஜ் காலனியில் நேற்று மாலை நடந்த வேல் யாத்திரை கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு பேசினார். இதில் மாநில பொதுசெயலாளர் ராகவன், மாநில துணை தலைவர்கள் நரேந்திரன், அண்ணாமலை, மாவட்ட தலைவர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். இதை தொடர்ந்து தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே, அண்ணா சிலை எதிரில் பாஜ சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். இதையடுத்து,தடையை மீறி கூட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா உள்பட மொத்தம் 106 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது பா.ஜனதா தொண்டர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

Related Stories:

>