×

சீன கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்படும்: அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் அதிரடி

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்படும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. நாட்டில் தகவல் ெதாடர்பு வலையமைப்பை பாதுகாக்கும் முயற்சியில் சீனா நிறுவனத்தின் தொலைதொடர்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு கருவிகளை தடை செய்வதாக கடந்த நவம்பரில் அமெரிக்க அரசு அறிவித்தது. இதேபோல் இங்கிலாந்திலும் அரசு கட்டிடங்களில் சீனாவின் ஹிக்விசன் தயாரித்த பாதுகாப்பு கேமராக்கள் தடை செய்யப்படுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சீன தயாரிப்பு கண்காணிப்பு கேமராக்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் அரசு அலுவலக கட்டிடங்களில் இருக்கும் சீன நிறுவன தயாரிப்பு கேமராக்கள் அகற்றப்படும் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  913 கண்காணிப்பு கேமராக்கள், இன்டர்காம்கள்  வீடியோ ரெக்காடர்கள் ஆஸ்திரேலிய அரசு அலுவலகங்களில் உள்ளதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. …

The post சீன கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்படும்: அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Australia ,US ,Canberra ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியவில் மயக்க மருந்து கொடுத்து பெண் எம்.பி-க்கு பாலியல் வன்கொடுமை