×

வால்பாறையில் ரேஷன் கடையை உடைத்து அரிசி, பருப்பை ருசித்த காட்டு யானைகள்

வால்பாறை: வால்பாறை பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை கூட்டம் ரேஷன் கடையை உடைத்து அரிசி,பருப்பை ருசித்தன. கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த உள்ள ஆனைமுடி எஸ்டேட்டில் நேற்று அதிகாலை வனத்தில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டம் ரேஷன் கடையை உடைத்து துவம்சம் செய்தது. கடையில் இருந்த அரிசி,பருப்பு, சர்க்கரை,கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தின்றும்,சிதறியும் சேதம் செய்தன.

தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் உத்திரவின்படி அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் யானைக்கூட்டத்தை அருகில் இருந்த சிற்றோடை பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில் யானைகள் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் புகுந்து ஓய்வெடுக்க துவங்கியது. யானைகள் தேயிலைத்தோட்டப்பகுதியில் முற்றுகையிட்டதால் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல பயந்து மாற்று இடத்தில் பணிபுரிய சென்றனர்.

தொடர்ந்து யானைகள் அதே பகுதியில் முற்றுகையிட்டு ள்ளதால் வனத்துறையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை பகுதியில் பல்வேறு எஸ்டேட்களில் தொடர்ந்து காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி வருகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வனத்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : Valparai , Valparai, ration shop, wild elephants
× RELATED காட்டு தீயில் 50 ஏக்கர் மரங்கள் நாசம்