×

தமிழகத்தில் அருங்காட்சியகங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அருங்காட்சியகங்களை மூட ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில் தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக சில தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. அந்த அடிப்படியில் நாளை முதல் தமிழகம் முழுவதும் இருக்க கூடிய அருங்காட்சியகங்கள் திறக்கலாம் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் அருங்காட்சியகங்கள்  திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில்;

ஆன்லைன் மூலம் மட்டுமே அனுமதி சீட்டு வழங்க அருங்காட்சியகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

அருங்காட்சியகம் வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனையும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்

அருங்காட்சியகங்கள் செல்ல பள்ளி, கல்லூரி மாணவர்கள் bulk booking செய்ய அனுமதி

அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும் நேரத்தை 30 நிமிடம் நீடிக்க வேண்டும்

அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள பழங்கால சிலைகள் மற்றும் தொல் பொருட்களை பார்வையாளர்கள் தொடுவதற்கு அனுமதி இல்லை

அருங்காட்சியகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான காத்திருப்பு அறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களையே அருங்காட்சியகங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu ,opening ,Tamil Nadu ,museums , The Government of Tamil Nadu has issued guidelines for the opening of museums in Tamil Nadu from tomorrow
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...