×

2,800 மரக்கன்றுகள் நடவு செய்து மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் திட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 15,586 சதுர அடி கொண்ட நிலத்தில்  2,800 மரக்கன்றுகள் நடவு செய்து மியாவாக்கி அடர் வனம் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று துவக்கி வைத்து ஆய்வு செய்தார். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள இடங்கள், நீர்நிலை ஓரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் மியாவாக்கி நகர்புற காடுகள் என்ற முறையினை பயன்படுத்தி அடர்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலபரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 23,800 சதுர அடி கொண்ட நிலத்தில் 20,724 சதுர அடியில் ரூ20 லட்சம் மதிப்பீட்டில் 40 வகையான 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம்-155ல் ராயலா நகர் 2வது பிரதான சாலையில் 10,000 சதுர அடி கொண்ட நிலத்தில் 6,000 சதுர அடியில் ரூ8.72 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரங்கள் 1 மீட்டர் இடைவெளி வீதம் 762 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக  சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 197 மாதிரி பள்ளி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 15,586 சதுர அடி கொண்ட நிலத்தில்  2,800 மரக்கன்றுகள் நடவு செய்து மியாவாக்கி அடர் வனம் அமைக்கும் திட்டத்தை ஆணையர் பிரகாஷ் நேற்று துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஷ், மேற்பார்வை பொறியாளர் (தெற்கு) பாலசுப்பிரமணியம், சோழிங்கநல்லூர் மண்டல அலுவலர் சுகுமார், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர் மற்றும் துவக்கம்தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாரம்பரிய மரவகைகள்
இந்த மியாவாக்கி அடர்வனங்களில் பாரம்பரிய மரவகைகளான ரோஜா, செம்பருத்தி, குண்டு மல்லி, முல்லை, பவளமல்லி, பாரிஜாதம், இட்லி பூ, நந்தியா வட்டம், அலமோண்டா, மூலிகை வகைகள் கற்புரவல்லி, பெரண்டை, தூதுவளை, துளசி, இன்சுலின், மரவகைகள் குண்டு மணி, பூங்கை, நாவல், கொடுக்காபுளி, வேம்பு, இலுப்பை, மருதம், பூவரசு, நாகலிங்கம், பாதாம், பப்பாளி, பின்னை, மந்தாரை, சிறுநெல்லி, செம்மரம், சில்வர்வுட், வில்வம், தான்றிக்காய், செண்பகம், மகிழம், மலைவேம்பு, புளியமரம், மருதாணி, விளாமரம், குடை மரம், கொய்யா, வெள்ளை எருக்கம், பலா மற்றும் தேக்கு போன்ற மரவகைகள் கொண்டு அடர் வனம் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Project to plant 2,800 saplings and set up Miyawaki forest: Corporation Commissioner Prakash launches
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...