×

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்: ராஜேஸ்வரி, போலீஸ்காரர் ஆனந்தின் தாய்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே உள்ள அணலை கிராமம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆனந்த் (26). வாத்தலை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். ஆனந்த் சமீப காலமாக செல்போன் மூலம் ஆன்லைனில் ரம்மி ஆடி வந்துள்ளார். இதற்காக தன்னுடன் பணிபுரியும் சக போலீஸ்காரர்களிடம் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கியதும், வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்களால் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்தது. இதனால் மன உளைச்சலில் ஆனந்த் இருந்து வந்தார். வழக்கம் போல் பணி முடிந்து இரவு வீட்டுக்கு சென்ற ஆனந்த்,

வீட்டு பின்பக்கம் உள்ள மாட்டு கொட்டகையில் தனது தாயின் சேலையில் தூக்கு  மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் ஆனந்த்தின் தாய் ராஜேஸ்வரி கூறியதாவது; எங்கள் மகன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பார். அவர் எந்த வம்பு தும்பிற்கும் போகமாட்டார். எங்கள் வீட்டிற்கு அருகிலேயே அவனுக்கு தனியாக ஒரு அறை அமைத்து கொடுத்து இருக்கிறோம். வேலைக்கு போய் வந்த பிறகு சாப்பிட்டு விட்டு அந்த தனியறையில் ஓய்வு எடுப்பார்.

ஆன்லைனில் சூதாடி பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதை எங்களால் நம்ப முடியவில்லை. இதுவரை அரசாங்கம் எங்கள் குடும்பத்திற்கு எந்த ஒரு ஆறுதலோ, உதவியோ செய்யவில்லை. ஈமசடங்கிற்கு கூட நிதி தரவில்லை.  தனியார் நிறுவனத்தில் பணி செய்திருந்தால் கூட ஏதாவது உதவி கிடைத்திருக்கும். ஆனால் அரசாங்க வேலையில் இருந்து எங்கள் மகன் இறந்தும் இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆயுதப்படையில் வேலையில் இருந்தபோது அங்கு பணியாற்றிய ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். நானும் அந்த பெண்ணை பார்த்து இருக்கிறேன்.

அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி தங்கையின் திருமணம் முடியட்டும் அதன்பிறகு நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிவந்தார். என் மகன் மட்டும் தற்போது இருந்திருந்தால் என் மகளுக்கும் திருமணம் செய்து வைத்து இருப்பார். அவருக்கும் திருமணம் நடந்து இருக்கும். ஆனால் என் மகனை இழந்துவிட்டதால் எங்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது. என் மகளை எப்படி கரை சேர்ப்பது என்று தெரியவில்லை. லாட்டரி சீட்டுகள் நேரிடையாக விற்பனை நடந்த போது கூட தற்கொலை சம்பவங்கள் நடக்கவில்லை. ஏனெனில் கடைக்கு சென்று லாட்டரி சீட்டு வாங்கினாலோ அல்லது பாக்கெட்டில் சீட்டை பார்த்தாலோ குடும்பத்தினர் கண்டிப்பார்கள்.

ஆனால் செல்போனில் தெரியாமல் விளையாடுவதால் யாருக்கும் தெரிவதில்லை. இதனால் பலகுடும்பங்களில் தற்கொலை சம்பவத்தால் பரிதவித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆன்லைன் லாட்டரி விளையாட்டை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் லாட்டரியால் எங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து எங்களுக்கு அரசாங்கம்தான் உதவி செய்ய வேண்டும் என்றார். லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்த போது கூட தற்கொலை சம்பவங்கள் நடக்கவில்லை. ஏனெனில் கடைக்கு சென்று லாட்டரி சீட்டு வாங்கினாலோ அல்லது பாக்கெட்டில் சீட்டை பார்த்தாலோ குடும்பத்தினர் கண்டிப்பார்கள். ஆனால் செல்போனில் தெரியாமல் விளையாடுவதால் யாருக்கும் தெரிவதில்லை.


Tags : Rajeswari ,Anand , Online rummy, ban, rajeswari,
× RELATED மக்காச்சோள கழிவில் தீ விபத்து