×

பெனிசில்வேனியா மாகாணத்தில் 20 வாக்குகளை பெற்று அபார வெற்றி: அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார் ஜோ பைடன்.!!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடெனும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருப்பதால், வழக்கத்துக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் கடும் தாமதம் ஏற்பட்டது.

கடந்த 3 நாட்களாக வாக்கு எண்ணிக்கை தொடர்ந்த நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி, 538 வாக்காளர் குழுவின் வாக்குகளில் பிடென் 253 வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றிருந்தனர். பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்பதால், பிடெனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில், பென்சில்வேனியாவில் 99% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஜோ பைடன் 29,000 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.

தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 284 எலக்டோரலட வாக்குகளுடன் அமெரிக்காவில் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகிறார். பென்சில்வேனியா மாகாணத்தில் பைடன் அபாரா வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாட்களாக நீடித்த இழுபறிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸ் வெற்றி:

 
இதனை போல், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகிறார். சென்னையை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகிறார்.


Tags : victory ,Pennsylvania ,Joe Biden ,President of the United States , Pennsylvania wins by 20 votes: Joe Biden becomes 46th President of the United States !!!
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை