×

வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, :வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில், இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பவரலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று கோத்தகிரியில் 120 மிமீ மழை பெய்துள்ளது. கேத்தி 100 மிமீ, சாமராஜ் எஸ்டேட் 90 மிமீ, குன்னூர், திருச்சுழி, பரமக்குடி 70 மிமீ, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராசிபுரம் 60 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், இலங்கை அருகே மன்னார் வளைகுடா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும். இது தவிர டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கடலூர் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

ெசன்னையில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக மயிலாப்பூரில் 18 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாம்பலத்தில் 13 மிமீ, ஆலந்தூரில் 11 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

இன்று நகரின் சில இடங்களில் லேசான முதல் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : thunderstorms ,Chennai , Chennai, heavy rain, rain, weather center, warning
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...