×

வடலூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் தவிப்பு

நெய்வேலி: கடலூர் மாவட்டம் வடலூர் ஆன்மிக நகரமாக திகழ்கிறது. இங்குள்ள வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சன்மார்க்க பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வடலூர் பேருந்து நிலையம் வழியாக செல்கின்றது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வடலூர் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, இலவச கழிப்பிட வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. குறிப்பாக குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் பேருந்து நிலையத்தில் கட்டண கழிவழை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்க படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த கட்டண கழிவறை முறையாக பராமரிக்க படாததால் துர்நாற்றம் விசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள் இலவச கழிப்பிடம் இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து வடலூர் பேரூராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வடலூர் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளிட்டவைகளை போர்க்கால அடிப்படையில் செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Passengers ,facilities ,bus stand ,Vadalur , Passengers suffering without basic facilities at Vadalur bus stand
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு