×

ரயில்முன் பாய்ந்து கேட்டரிங் தொழிலாளி சாவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (28). இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஐந்து வருடம் ஆகிறது. இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் ரித்தீஷ் (2) மகனும் உள்ளனர். ராமநாதன் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலை திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற புறநகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Catering worker ,train accident , Catering worker killed in train accident
× RELATED ஆந்திராவில் ஏற்பட்ட கொடூரமான ரயில் விபத்து : 19 பேர் பலியான பரிதாபம்!!