×

கோடுவெளி ஊராட்சியில் பயணியர் நிழற்குடை திறப்பு

ஊத்துக்கோட்டை: கோடுவெளி ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது. பெரியபாளையம் அருகே கோடுவெளி ஊராட்சி காரணிபேட்டை கிராமத்தில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமியின், 2019-2020ம் ஆண்டின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகுமார், துணை தலைவர் சரத் வரவேற்றனர். பெரியபாளையம் பிடிஒ அகஸ்டீன்ராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு ரூ.10 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்குடையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் பாஸ்கர், டிகே.முனிவேல், முரளி, வக்கில்கள் சீனிவாசன், முனுசாமி, ஊராட்சி செயலாளர் அன்பு, சங்கர், சிட்டிபாபு, அப்புன், சம்பத்குமார், சூரன், ராமமூர்த்தி, ரஞ்சித் மற்றும் மகளிரணியினர் கலந்துகொண்டனர்.


Tags : Passenger Umbrella Opening , Passenger Umbrella Opening in Line Panel
× RELATED செருமாவிலங்கை சூரக்குடியில் பயணிகள் நிழற்குடை திறப்பு