×

VPF கட்டணம் செலுத்தப்போவதில்லை என்பதில் உறுதி...!! தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்; இயக்குநர் டி.ராஜேந்தர் பேட்டி

சென்னை: VPF கட்டணம் செலுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தயாரிப்பாளர், இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். திரையரங்கு உரிமையாளர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடரும் எனவும் கூறினார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. மேலும், தற்பொழுது தீபாவளி பண்டிகை சமயம் என்பதால் புதிய திரைப்படங்கள் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

தியேட்டரில் டிஜிட்டல் முறையில் படங்களை ஒளிபரப்ப விபிஎப் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை தயாரிப்பாளர்கள்  செலுத்தி வந்தனர். இனிமேல் தியேட்டர் அதிபர்கள்தான் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்  பாரதிராஜா தெரிவித்து இருந்தார்.  கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் புதிய படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்றும் அவர்  கூறினார். இது குறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: விபிஎப் கட்டணத்தை வசூலிக்கும்  டிஜிட்டல் நிறுவனங்களிடமிருந்து எங்களால் சலுகைகள் பெற்றுத் தர முடியும். அதன்படி, இதற்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் வி.பி.பி கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில், எந்த உடன்பாடும் எட்டப்படாததால் தீபாவளியன்று திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வி.பி.பி கட்டணம் செலுத்த திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என இரு தரப்பும் மறுப்பதால் இந்த இழுபறி நீடித்துள்ளது. தமிழ்ப் படங்களை வெளியிட்டால் பிறமொழிப் படங்களை வெளியிடுவோம் எனத் தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து பேட்டி அளித்த தயாரிப்பாளர், இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியதாவது; VPF கட்டணம் செலுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுதொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : VPF ,Negotiations ,T.Rajender , Make sure the VPF fee is not going to be paid ... !! Negotiations will continue; Interview with Director T.Rajender
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...