சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அம்மா உணவகங்கள் மூலம் கொரோனா காலத்திலும் விலையில்லா உணவு வழங்கி ஏழை மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளது. அம்மா உணவகங்களை தேடி தொழிலாளர்களின் சிரமங்களை அறிந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே உணவை கொண்டு செல்ல சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக நடமாடும் அம்மா உணவக சேவையை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கவுள்ளார். வரும் நாட்களில் கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் எளிமையாக உணவு கிடைக்க இத்திட்டத்தை விரிவுப்படுத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>