×

900 கோடி முதலீடு திரட்டி ஃபிரஷ் டூ ஹோம் சாதனை

சென்னை: மீன் மற்றும் இறைச்சி மின்-வணிகத்தில் உலகின் பெரும் முழு இயங்குதளம் பிராண்ட் ஃபிரஷ் டூ ஹோம். தோராயமாக மாதத்திற்கு 15  லட்சம் ஆர்டர்கள் மற்றும் ஆண்டுக்கு ₹600 கோடிக்கு விற்பனை விகிதத்துடன்  ஃபிரஷ் டூ ஹோம் செயல்படுகிறது. முக்கிய இந்திய நகரங்கள்  (மும்பை, டெல்லி/தேசிய தலைநகர், பெங்களூர், ஹைதராபாத், புனே, கேரளா மற்றும் தமிழ்நாடு) மற்றும் ஐக்கிய அரபு அமீரங்களில் உள்ள   விவசாயிகள் மற்றும் மீனவர்களிடமிருந்து நேரடியாக உயர்தர இறைச்சி மற்றும் மீன்களை அதன்  விற்பனையாளர்களுக்கு கிடைக்கச் செய்கிறது. இதுகுறித்து ஃபிரஷ் டூ ஹோம் நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷான் கடவில் கூறியதாவது:  

கோவிட்-19 காரணமாக நுகர்வோர்கள் மின்-வணிகத்துக்கு மாறியுள்ளனர். இந்தாண்டு நாங்கள் விற்கும் இறைச்சி, மீன்களுக்கான ேதவை  ஆன்லைனில் பல மடங்கு அதிகரித்ததை கண்டோம் “100% புதியது மேலும் 0% ரசாயனம்” என்ற பாதுகாப்பு உத்திரவாதத்துடன் ஃபிரஷ் டூ ஹோம்  பிராண்ட் முன்னணியில் நிற்கிறது. துபாய் அரசின் துபாய் முதலீட்டுக் கழகம், இன்வெஸ்ட்கார்ப், அஸ்சென்ட் கேபிடல், அமெரிக்க அரசின் மேம்பாட்டு  நிதி நிலையம், தி அல்லானா குழுமம் மற்றும் பிற முதலீட்டாளர்களிடம் இருந்து மூன்றாம் கட்ட (சி சீரிஸ்) முதலீடாக ₹900 கோடியை ஃபிரஷ் டூ  ஹோம் பெற்று சாதனை படைத்துள்ளது.

2ம் கட்ட மூதலீட்டாளர்  ஐயர்ன் பில்லர் இந்த முறையும் முதலீடு செய்துள்ளது. நாங்கள் பெரும் சந்தையின் சிறு பகுதியை தொட்டுள்ளோம். புதிய  முதலீடு இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் துரித விரிவாக்கம் மூலம் எங்கள் முழு ஆற்றலை மெய்ப்பிக்க உதவும் என்றார்.

Tags : 900 crore investment mobilization Fresh to Home record
× RELATED மின்சார ரயில் சேவை ரத்து