விஷம் ெகாடுத்து அக்கா, மாமாவை கொன்ற வழக்கு: இறந்தவர் வங்கி கணக்கிலிருந்து 5 லட்சம் எடுத்த பெண் கைது

சென்னை: மயிலாப்பூர் சித்திரை குளம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (45). இவரது மனைவி மீனாட்சி (40). இருவரும் அதே பகுதியில்  பூக்கடை  நடத்தி வந்தனர். தம்பதிக்கு குழந்தை இல்லை. இவர்கள் இருவரும்  உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி  மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்த நாட்களில்   தர்மலிங்கம் மற்றும் மீனாட்சி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் சாவில் மர்ம இருப்பதாக தர்மலிங்கத்தின் அண்ணன் குமார், மயிலாப்பூர்  போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், இருவரது உடலிலும் விஷம் கலந்திருப்பது தெரிந்தது.  

இந்நிலையில், மீனாட்சி வங்கி கணக்கில் இருந்த 17 லட்சத்தை, அவரது தங்கை மைதிலி, தனது வங்கி கணக்கில் மாற்றியது தெரிந்தது. இது  தொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பணம் மற்றும் சொத்துக்கு  ஆசைப்பட்டு மைதிலி, பூக்கடையில் வேலை  செய்த கள்ளக்காதலன் பாலமுருகன் (29) என்பவருடன் சேர்ந்து தனது அக்கா மற்றும் மாமாவை விஷம் (ஸ்லோ பாய்சன்) கொடுத்து  கொலை  செய்தது தெரிந்தது.  இதையடுத்து,  இரட்டை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மைதிலி, பாலமுருன், மைதிலியின் கணவர் பிரவீன் குமார்,  அவரது மகன் பிஷாக் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் பிரவீன் குமார் மற்றும் பிஷாக் ஜாமீனில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வழகக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி  சிபிசிஐடி எஸ்பி கண்ணன், காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இந்நிலையில்,  இறந்த மீனாட்சியின் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்தை லதா என்பவர் எடுத்து, தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தது தெரிந்தது. இதனைத்  தொடர்ந்து லதாவை கைது செய்த சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>