தேவாலயம் உள்ளிட்ட 6 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் :ஆஸ்திரியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி ஆறுதல்!!

புதுடெல்லி : ஆஸ்திரியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இந்தியா ஆஸ்திரியாவுக்கு எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவின் தேவாலயத்தை சுற்றி 6 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். மத்திய வியன்னா நகரில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு அருகே நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

அடுத்தடுத்த மேலும் 5 இடங்களிலும் தாக்குதல் நடைபெற்றது. இதனால் சாலைகளில் நடந்து சென்றவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். காவல்துறையினரும் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். அதில் 7 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வியன்னா மேயர் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகள் நகர மையத்திலிருந்து விலகி இருக்கவும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் மக்களைகேட்டு கொண்டு உள்ளார்.

இந்த நிலையில், வியன்னாவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் தனது டுவிட்டர் பதிவில் ‘‘வியன்னாவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களால், அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், ஆஸ்திரியாவுக்கு இந்தியா துணை நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்’’ என பிரதமர் கூறியுள்ளார். 

Related Stories:

>