×

மக்களுடன் மட்டுமே மநீம கூட்டணி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கமல்ஹாசன் புது குண்டு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
3 நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் முதல் நாளில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கடலூர், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்களும் மற்றும் இந்த மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்துக்கு கமல்ஹாசன் தலைமை  தாங்கினார். இதில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக செயலாளர்களுடன்  கமல் ஆலோசனை நடத்தினார். தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் மாவட்ட  செயலாளர்களிடமிருந்து ஆலோசனை பெறப்பட்டது. கூட்டணி அமைத்தே தேர்தலை  சந்திக்க வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் விருப்பம்  தெரிவித்ததாக கூறப்பட்டது.

அப்போது கமல்ஹாசன் பேசும்போது, ‘சட்டப்பேரவை தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்தல், தேர்தல் நிதியை வலுவாக்குதல் ஆகியவற்றில் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. மேலும் கூட்டணி என்பது என் வேலை. வெற்றிக்கு நீங்கள் உழையுங்கள். நம் கூட்டணி மக்களுடன்’ என்றார். மாவட்ட வாரியாக தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட மநீம எதிர்பார்த்த அளவு வாக்குகளை வாங்கவில்லை. இதுவே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் சோர்வை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தமிழக பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் என்று நினைத்து இருந்த தொண்டர்களுக்கு தனித்து போட்டி என்ற கமலின் அறிவிப்பு பெரிய அதிருபத்தியை ஏற்படுத்தி உள்ளது.



Tags : alliance ,district secretaries meeting ,Kamal Haasan , Manima alliance only with the people: Kamal Haasan new bomb at district secretaries meeting
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...