×

நைட் ரைடர்ஸ் உற்சாகம் கை கொடுத்த கம்மின்ஸ், மோர்கன்

துபாய்: அதிரடி பேட்டிங்கில் கேப்டன் மோர்கனும், வேகப் பந்துவீச்சில் கம்மின்சும் அசத்தியதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  லீக் சுற்றின் கடைசி நாளான இன்றுவரை பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துள்ளது. துபாயில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச, கொல்கத்தா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. மோர்கன் 68*, திரிபாதி 39, ஷுப்மன் கில் 36 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் திவாதியா 3, தியாகி 2, ஆர்ச்சர், கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் பட்லர் 35, திவாதியா 31 ரன் எடுத்தனர்.

கொல்கத்தாவின் கம்மின்ஸ் 4, வருண், மாவி தலா 2, நாகர்கோட்டி ஒரு விக்கெட் எடுத்தனர்.கேகேஆர் தலா 7 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது. அதனால் நேற்று முன்தினம்  இரவு முதல் இன்று மாலை வரை  பிளே ஆப் வாய்ப்பில் கொல்கத்தாவும் தொடர்கிறது. அதற்கு மோர்கன், கம்மின்ஸ் பங்களிப்பு தான் முக்கிய காரணம். ராணா, நரைன், கார்த்திக் டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில் மோர்கன்  35 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர் விளாசி 68 ரன் எடுத்தார். அதேபோல் பந்து வீச்சில் உத்தப்பா, ஸ்டோக்ஸ், பட்லர், ஸ்மித் என 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி கம்மின்ஸ் வெற்றிக்கு கை கொடுத்தார். கூடவே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் கடைசி லீக் போட்டி வரை, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப் போகும் 3வது, 4வது அணிகள் எவை என்று தெரியாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்.

Tags : Cummins ,Morgan ,Knight Riders , Cummins, Morgan, who gave the Knight Riders enthusiastic hand
× RELATED சுனில் நரைன் அதிரடி ஆட்டம் நைட் ரைடர்ஸ் முதலிடம்