×

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்: துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

பாபநாசம்: மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் 63 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு வந்தடைந்தது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியில் அமைச்சருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. மேலும் அமைச்சர் துரைக்கண்ணு இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்கு நிகழ்வில் துணை முதல்வர் ஓபிஎஸ், வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் கலந்துக்கொண்டனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், வளர்மதி, சி.வி.சண்முகம், வேலுமணி, ஒ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், காமராஜ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் இறுதி சடங்கில் பங்கேற்றனர். வேளாண்த்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் அரசு மரியாதையுடன் அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தஞ்சை சரக எஸ்.பி ராஜகிரியில் நல்லடக்கம் செய்ய உள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் துரைக்கண்ணு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் போன்ற தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 13-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு முச்சுதிணரல் இருப்பதால் உயிர் காக்கும் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 வாரங்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வந்ததாக மருத்துவமனைய நிர்வாகம் அறிக்கை அளித்தது. எனவே நேற்று இரவு 11.15 மணியளவில் வேளாண்த்துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தஞ்சை மாவட்ட பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றார். 2006, 2011, 2016 என மூன்று முறை வெற்றி பெற்று 2016 -ஆம் ஆண்டு முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வேளாண்த்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டது. இவர் 11 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார்.

Tags : Durakkannu ,Ministers ,Deputy Chief Minister , Minister Durakkannu in good health with the respect of the government to ring 21 bombs: Deputy Chief Minister, Ministers participate
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு