×

திங்கள்நகரில் ரூ.5 கோடியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்; அடுத்தமாதம் முதல்வர் திறக்கிறார்: பிரின்ஸ் எம்.எல்.ஏ. தகவல்

திங்கள்சந்தை: திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டது. தற்போது ரூ.5.85 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 60க்கும் மேற்பட்ட கடைகள், புறக்காவல் நிலையம்,  கழிவறை, அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து அலுவலகங்களும் இங்கு உள்ளன. இந்த புதிய கட்டிடம் திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இது குறித்து பிரின்ஸ் எம்எல்ஏ கூறியது: திங்கள்நகரில் அனைத்து வசதிகளுடன்  கூடிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் ரூ.5.85 கோடியில் கட்டுமான பணி நடந்து முடியும் தருவாயில் உள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடக்கிறது. அடுத்த மாதம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் குமரிக்கு வரும்போது திறந்து வைக்கிறார்.

அதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. புதிய பேருந்து நிலையம் பெருந்தலைவர்  காமராஜர் பெயரில் செயல்படும். பழைய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தவர்  காமராஜர். அதற்கான கல்வெட்டுகள் இன்றும் உள்ளது. அந்த கல்வெட்டை புதிய பேருந்து நிலையத்தில் நினைவு சின்னமாக அமைக்கவும், பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அருகில் காமராஜரின் முழு உருவ சிலையும் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணியில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் பணியை நிறைவு செய்து திறப்பு விழா நடக்கும். வரும் டிசம்பர் மாதம் கடைகளுக்கான ஏலம் விடப்படும். வெளிப்படையான பொது ஏலம் விட  அதிகாரிகளை கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kamaraj ,bus stand ,Thingalnagar ,CM , Chief Kamaraj names new bus stand to be built at Rs 5 crore in Thingalnagar; Chief opens next month: Prince MLA Information
× RELATED காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா