×

பகுஜன் சமாஜ் 7 எம்எல்ஏ.க்கள் தற்காலிக நீக்கம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்  ராம்ஜி கவுதம்  வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் அவரை முன்மொழிந்து தங்கள் கையெழுத்து போலியாக போடப்பட்டு இருப்பதாக பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 4 பேர் குற்றம்சாட்டினர்.

மேலும், இக்கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தாகவும் செய்திகள் வெளியாகின இந்நிலையில், தனது கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 7 பேரை தற்காலிக நீக்கம் செய்து, கட்சியின் தலைவர் மாயாவதி நேற்று உத்தரவிட்டார். ‘இந்த எம்எல்ஏ.க்களை கட்சியின் எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க கூடாது. இவர்கள் எந்த கட்சியில் இணைந்தாலும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றும் அவர் அறிவித்துள்ளார்.



Tags : Bahujan Samaj , Bahujan Samaj 7 MLAs Suspension
× RELATED பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது,...