×

முன்னாள் கூடுதல் டிஜிபி வீரராகவன் காலமானார்

சென்னை:  சென்னை தேனாம்பேட்டை  செனடாப் சாலை 2வது லேன் பகுதியை சேர்ந்தவர் வீரராகவன் (80). கடந்த 1965ம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். சென்னை மாநகரில் போக்குவரத்து துணை கமிஷனராகவும், கடலூர், சேலம் மாவட்ட கண்காணிப்பாரளாகவும் பணியாற்றினார். அதைதொடர்ந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு ெபற்ற அவர், காவல் துறை தலைமையிட கூடுதல் டிஜிபியாகவும், தீயணைப்புத்துறை இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.  பின்னர் தமிழக காவல் துறையில் இருந்து ஓய்வு ெபற்ற அவர், தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக அவர் நேற்று தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். …

The post முன்னாள் கூடுதல் டிஜிபி வீரராகவன் காலமானார் appeared first on Dinakaran.

Tags : DGB ,Chennai ,Veeraragavan ,Senatap Road ,Chennai Tenampet ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...