வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை..!!

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக நவம்பர் 3ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தான், சிறப்பு முகாம் அமைப்பது மற்றும் வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் பெயர்கள் இருப்பது, பெயர்கள் திருத்தம், நீக்கம் மற்றும் பூத் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் கருத்துக்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிப்பார்கள். இதற்கு பின்பாக சிறப்பு முகாம்களும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பது தொடர்பாக தேர்தல் ஆணையமானது, அதற்கான தேதியை அறிவிக்கும். அதற்கு முன்பாக நவம்பர் 3ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து தான், தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட ஜனவரி 20ம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இரட்டை பதிவுகளை நேரடியாக சென்று நீக்குவது மற்றும் பல்வேறு பிரச்சனைகள் இருப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories:

>