×

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைக்கப்பட்ட 116 இடங்கள் மீண்டும் அதே பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது: ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை வங்கி அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த ஆள்தேர்வு அறிவிக்கையில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 116 இடங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து பாமக சார்பில் வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடங்கள் மீண்டும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது. வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்ட ஆள் தேர்வு அறிவிக்கையை ஆய்வு செய்து பார்த்தபோது யூகோ வங்கியில் நிரப்பப்படஉள்ள 350 அதிகாரிகள் பணி இடங்களில் 208 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவினருக்கும், 142 இடங்கள் பொதுப்போட்டி பிரிவினருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
 
பாமக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வங்கி அதிகாரிகள் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அநீதி இழைத்தது ஏன்? என்று யூகோ வங்கி, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கை அனுப்பியது. இந்த நடவடிக்கை மூலம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 82 இடங்கள் உட்பட இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மொத்தம் 114 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. அதாவது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவினரிடம் இருந்து பறிக்கப்பட்ட 32.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை மீட்டு கொடுத்திருக்கிறது.


Tags : Ramadan , The reduced 116 seats for the reserved category have again been allotted to the same category: Ramadan welcome
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து