×

நீர்வரத்து தடுப்புச்சுவர் அகற்றக்கோரி மறியல் மக்கள் மீது தடியடி 200 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் கன்னிமார் கோயில் அருகே 7 அடி தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. இதனால் 20 கிராமங்கள் 4 வருடங்களாக சரியான குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதையடுத்து தடுப்புச்சுவரை அகற்றக்கோரி, கருப்பு கொடியேந்தி பெண்கள் உட்பட  500 பேர் திரண்டு திண்டுக்கல் - தேனி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாததால், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் 200 பேரை கைது செய்தனர்.


Tags : protesters ,removal , 200 people arrested for beating protesters to remove water barrier
× RELATED 13 பேர் டிஸ்சார்ஜ்