×

புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த தோழிகள்: பென்னேரியில் நடந்த திருமண விழாவில் ருசிகரம்

பொன்னேரி: திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு தோழிகள் வெங்காயத்தை பரிசாக அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. வெங்காயத்தை உரிக்காமலேயே இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீர் வரும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் மணமக்களுக்கு பரிசாக வழங்கினர். விலை உயர்வை உணர்த்தும் வகையில் வெங்காயத்தை பரிசாக வழங்கப்பட்ட இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags : Friends ,wedding , Onions, Newlyweds, Gift
× RELATED தீபாவளி மது விருந்தில் தகராறு 2 பேர் அடித்து கொலை: நண்பர்கள் கைது