×

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு

அண்ணாநகர்: வில்லிவாக்கம், கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் இளவரசன்(22), கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். அப்போது, அவ்வழியாக ரோந்து வாகனத்தில் வந்த வில்லிவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வமணி, இளவரசனை மடக்க முயன்றனர். ஆத்திரமடைந்த இளவரசன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, உதவி ஆய்வாளர் செல்வமணியை வெட்டினார். இதில், அவரது இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. தடுக்க முயன்ற பக்கத்து வீட்டை சேர்ந்த கதிர்வேலுக்கும் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர்.

Tags : assistant inspector , Sickle cut for assistant inspector
× RELATED நிவர் புயல் முன்னெச்சரிக்கை...