×

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அரசை குறை கூறுவது பாமக.நிறுவனர் ராமதாசுக்கு வழக்கமான ஒன்று தான் : அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி : ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அரசை குறை கூறுவது பா.ம.க.நிறுவனர் ராமதாசுக்கு வழக்கமான ஒன்று தான் என அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார். ஏரலில் 3.78 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அமைச்சர், ராமதாஸ் கூறிய கருத்துக்கும், அதிமுக - பா.ம.க. கூட்டணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றார்.

 முன்னதாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். சுவாமி தரிசனத்தைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘உலக அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவில் இந்தாண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 26ம் தேதி (திங்கட்கிழமை) இரவு ஆகம விதிப்படி நடைபெறும். இதில் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்பர்.இருப்பினும் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அவரவர் ஊர்களிலேயே விரதத்தை நிறைவு செய்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : government ,election ,Kadampur Raju ,Ramdas ,BJP , பாமக.நிறுவனர், ராமதாஸ் ,அமைச்சர் கடம்பூர் ராஜு
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...