சூரரைப் போற்று திரைப்படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30ல் ரிலீஸ் இல்லை : நடிகர் சூர்யா அறிக்கை

சென்னை : சூரரைப் போற்று திரைப்படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30ல் ரிலீஸ் இல்லை என சூர்யா அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதன்படி விளம்பரம் செய்யப்பட்டு வந்ததுஆனால் கடந்த ஒரு வாரமாக திடீரென விளம்பரம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைத்து இருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சூரரைப்போற்று படத்தின் பல காட்சிகள் இந்திய விமானப்படை குறித்து இருப்பதால் இந்திய விமானப்படையின் தடையில்லாச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அந்த சான்றிதழை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.எனவே அக்டோபர் 30ம் தேதி திட்டமிட்டபடி சூரரைப்போற்று திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை.இருப்பினும் மிக விரைவில் உறுதியான ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>