×

மோசமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் பாக்.

இஸ்லாமாபாத்: ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கவும் பண மோசடிகளை தடுக்கவும் அந்தந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன் ‘கிரே’ எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் இடம் பெறும் நாடுகளுக்கு உலக வங்கி சர்வதேச நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிதி உதவி கிடைக்காது. பாகிஸ்தான் கடந்த 2018 ஜூனில் இருந்து ‘கிரே’ பட்டியலில் இடம்பெற்று வருகிறது. இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு எப்.ஏ.டி.எப். அமைப்பு 27 செயல்திட்டம் கொடுத்திருந்தது.

ஆனால் அதில் முக்கியமான செயல் திட்டங்களை பாகிஸ்தான் செயல்படுத்தவில்லை. இந்த நிலையில் ‘முக்கியமான நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றாததால் ‘கிரே’ நிற பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லை’ என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘அதே நேரத்தில் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மிகவும் மோசமான நாடுகள் என்ற கருப்புப் பட்டியலில் இடம்பெறாது. ஆனால் கிரே நிற பட்டியலில் தொடரும்’ என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூனில் பாகிஸ்தான் கிரே நிற பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pakistan ,countries , Bach continues to feature in the list of worst countries.
× RELATED பாகிஸ்தான் பயணம் ரத்து