பில்லி சூனியம் எடுப்பதாக சென்னைக்கு அழைத்து தென்காசி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி: போலி சாமியாருக்கு போலீஸ் வலை

சென்னை: தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன்(45). மினிவேன் டிரைவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சாமியார் ஒருவரை பார்த்து அவரிடம் தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்வதாகவும் கூறியுள்ளார். அந்த சாமியார் உனக்கு பில்லி சூனியம் சிலர் வைத்துள்ளதாகவும், அதனை எடுக்க சென்னை வருமாறும், வரும்போது ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 கோழிகள் எடுத்து வருமாறும் கூறியுள்ளார். ராஜகுமாரன் தனது மினிவேனை ரூ.5 லட்சத்திற்கு விற்று உறவினருடன் வண்ணாரப்பேட்டை அருகே அந்த சாமியாரிடம் ரூ.2 லட்சம் பணத்தையும், 2 கோழிகளையும் கொடுத்துள்ளார். இதைபெற்ற சாமியார் தலைமறைவானார்.புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: