அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது. கடந்த 12ம் தேதி இரு அணிகளும்மோதிய போட்டியில் பெங்களூரு 82 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு பழிதீர்க்க கொல்கத்தா போராடும். இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 14ல் கொல்கத்தா, 11ல் பெங்களூரு வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 ஆட்டத்தில் 3ல் கொல்கத்தா வென்றுள்ளது.