பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வேத்துறை அறிவிப்பு

சென்னை: பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. வண்டி எண் 02028 கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் இடையே ஏசி வசதி கொண்ட ரயில் இயக்கப்படுகிறது. இறுமார்க்கத்திலும் வாரத்துக்கு 6 நாட்கள், செவ்வாய் கிழமை நீங்கலாக ரயில் இயக்கப்படும் என கூறப்படுகிறது. வரும் 23-ம் தேதி முதல் கேஎஸ்ஆர் பெங்களூரு -சென்னை இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரல்- பெங்களூரு இடையே இரண்டு அடுக்கு குளிரூட்டப்பட்ட அதிவேக சிறப்பு ரயில் (06075) நாளை முதல் தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தை பிற்பகல் 1.10 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதே போல, கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06076) நாளை முதல் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, பெரம்பூர், வழியாக அன்றிரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும் எனவும் கூறியுள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>