×

மன்னார்குடி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா. இவர், தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து குறை கேட்பது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்ற அவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டி.ஆர்.பி. ராஜா நேற்று மதியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : Corona ,MLA ,Mannargudi ,DMK , Corona confirms Mannargudi DMK MLA
× RELATED விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா