×

விமான நிலைய பராமரிப்பு அதானி குழுமத்திற்கு பணி வழங்கியதை எதிர்த்த கேரள அரசு மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தை நடத்தும் பொறுப்பு அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களை நடத்தும் பொறுப்பை தனியாரிடம் விட மத்திய அரசு தீர்மானித்தது. இதுதொடர்பாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. இதில் திருவனந்தபுரம் விமான நிலையம் நடத்தும் பொறுப்பை பெறும் டெண்டரில் அதானி குழுமமும், கேரள அரசின் சிறுதொழில் வளர்ச்சி கழகமும் கலந்து கொண்டன. ஆனால் இதில் அதானி குழுமம் முன்னிலையில் இருந்ததால் அதற்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து கேரள அரசு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதுதொடர்பான விசாரணை நடந்தபோது, அதானி குழுமத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன எனவும், ஏல நடவடிக்கைகள் வெளிப்படையாக நடக்கவில்லை எனவும் கேரள அரசு குற்றம் சாட்டியது. ஆனால் மத்திய அரசு தரப்பில், ‘கேரள அரசின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஏலம் எடுப்பதில் தோல்வி அடைந்த பின்னர், தடை விதிக்க கோரி கேரள அரசு வழக்கு தொடர்ந்திருப்பது முறையல்ல’ என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது கேரள அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags : Kerala High Court ,Adani Group , Kerala govt dismisses petition against Airport Maintenance Adani Group: High Court orders action
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...