×

குமரியில் ‘சஜாக்’ ஆப்பரேசன்: 6 தரைவழி செக்போஸ்டுகளில் சோதனை

கன்னியாகுமரி: தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுறுவுவதை தடுக்கும் வகையில், கன்னியாகுமரி கடலில்  கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ‘சஜாக் ஆப்பரேசன்’ என்ற தீவிரதவாத தடுப்பு ஒத்திகையில் இன்று ஈடுபட்டனர். கன்னியாகுமரி கடலில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ‘சஜாக் ஆபரேஷன்’ எனப்படும் தீவிரவாத தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 52 கடற்கரை கிராமங்களில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அதிநவீன படகு மூலம் கடலில் ரோந்து செல்கின்றனர். குறிப்பாக கூடன்குளம் அணுஉலையின் பின்புற பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இதேபோல் தேங்காப்பட்டணம், முட்டம், குளச்சல், மகாதானபுரம், மாதவபுரம், சின்னமுட்டம் உள்ளிட்ட 6 தரை வழி செக்போஸ்ட்களில் போலீசார் வாகன சோதனை நடத்துகின்றனர். அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். அப்போது சந்தேகப்படும்படியான நபர்களோ, பொருட்களோ தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

Tags : Sajak ,Test ,ground checkposts ,Kumari , ‘Sajak’ Operation in Kumari: Test at 6 ground checkposts
× RELATED இளநிலை பட்டப்படிப்பில் 75% மதிப்பெண்...