×

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லோக்பாலில் ஓராண்டில் 1,427 புகார்கள் பதிவு: 10 பேர் மத்திய, மாநில அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள்

புதுடெல்லி, :லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லோக்பால் அமைப்பில் கடந்த ஓராண்டில் 1,427 புகார்கள் வந்துள்ளன. அதில், 10 புகார்கள் மத்திய, மாநில அமைச்சர், எம்பி, எம்ஏல்ஏக்கள் மீது கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுத் துறைகளின் உயர் மட்டத்தில் ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்பானா வழக்குகளை விசாரிக்க லோக்பால் அமைப்பும், மாநில அரசு சார்பில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் லோக் ஆயுக்தா அமைப்புகளும் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில் லோக்பால் அமைப்பில் 2019-20ம் ஆண்டில் ஊழல், லஞ்சம் தொடர்பாக மொத்தம் 1,427 புகார்கள் பதிவாகி உள்ளன. மத்திய அரசின் தரவுகளின்படி, மத்திய அரசு அதிகாரிகள் மீது 245 புகார்கள், மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், சட்டரீதியான அமைப்புகள், நீதித்துறை மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு எதிராக 200 புகார்கள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக 135 புகார்கள் வந்துள்ளன. அதேபோல், மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது ஆறு புகார்களும், மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களுக்கு எதிராக நான்கு புகார்களும் வந்தன.

மொத்தமாக 10 மத்திய, மாநில அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் மீதும் புகார்கள் வந்துள்ளன. மொத்த புகார்களில் 220 கோரிக்கைகள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளும் அடங்கும். மாநில அரசுக்கு எதிராக பெறப்பட்ட 613 புகார்களில் மாநில அதிகாரிகள் மற்றும் மாநில அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள், சட்டரீதியான அமைப்புகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் ஆகியவை அடங்கும். இவற்றில் 1,347 புகார்கள் தீர்க்கப்பட்டு 1,152 புகார்கள் லோக்பாலின் அதிகார எல்லைக்கு வெளியே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், 78 புகார்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. 45 புகார்கள் விசாரணை அறிக்கைக்காக அனுப்பப்பட்டன. 32 புகார்கள் நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்பட்டன. 29 புகார்கள் மத்திய விஜிலென்ஸ் ஆணையத்தில் நிலுவையில் உள்ளன. இவர்களில் 25 பேருக்கு நிலை அறிக்கையும், நான்கு பேரிடம் விசாரணை அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. உயர்மட்ட விசாரணையில் நான்கு புகார்கள் நிலுவையில் உள்ளன. அதாவது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஒரு நிலை அறிக்கை உட்பட இரண்டு புகார்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Union ,MPs ,state ministers , Bribery, corruption, allegations, Lokpa
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...