×

பண்டிகை காலத்தை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருவனந்தபுரம் - கோர்பா - திருவனந்தபுரம் இடையும் (02648, 02647) அதிவேக சிறப்பு ரயில்களும், அதேபோன்று புரி - சென்னை சென்ட்ரல் இடையே அதிவேக சிறப்ப ரயில்  (02859) வரும் 25 மற்றும் நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும் அதே போன்று  சென்னை சென்ட்ரல்-  புரி (02860) இடையே அதிவேக சிறப்பு ரயில் 4:25  மணிக்கு 26 நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் மாலை 3:10 மணிக்கு புரி சென்றடையும்.

மேலும் விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் இடையே ரயில் எண் (02869) அதிவேக சிறப்பு ரயில் 26 நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 7:05 புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 8:55 மணிக்கு வந்தடையும். அதே போன்று சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் இடையே ரயில் எண் (02870) அதிவேக சிறப்பு ரயில் 27 நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 9:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:25 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும். மேலும் புவனேஷ்வர் - சென்னை சென்ட்ரல் இடையே அதிவேக சிறப்பு ரயில் (02839) 22, 29, நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

அதே போல் சென்னை சென்ட்ரல் - புவனேஷ்வர் இடையே ரயில் எண் (02840) 23, 30, நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 9:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5:25 மணிக்கு புவனேஷ்வர் சென்றடையும். மேலும் ஐதராபாத் - தாம்பரம் இடையே அதிவேக சிறப்பு ரயில் (02760) 20 ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை 5:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அதே போன்று தாம்பரம் - ஐதராபாத் இடையே அதிவேக சிறப்பு ரயில் (02759) 21ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.


Tags : season ,announcement ,Southern Railway , Operation of 8 special trains ahead of festive season: Southern Railway announcement
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...