×

இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: துல்லியமாக இலக்கைத் தாக்கி அழித்தது..!!

டெல்லி: அரபிக்கடலில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.  இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணைகள் 300 கி.மீ தொலைதூரத்துக்கு சென்று தாக்கும் திறன் படைத்தது.

பிரமோஸ் ஏவுகணைகள் ஏற்கனவே இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டன. இந்த ஏவுகணையை நிலத்தில் இருந்து மட்டுமின்றி கப்பல், விமானம், நீர்மூழ்கி கப்பல் மற்றும் நகரும் வாகனங்களில் இருந்து வெற்றிகரமாக செலுத்த முடியும். இந்த ஏவுகணைகளை இந்திய விமானப்படையும், கடற்படையும் அடிக்கடி சோதனை நடத்தி வருவது வழக்கமாகும். இத்தகைய சோதனை ஒன்று தற்போது அரபிக்கடலில் நடத்தப்பட்டது.

இந்திய விமானப்படை இந்த சோதனையை மேற்கொண்டது. தொடர்ச்சியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது நகரும் வாகனத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அந்த ஏவுகணை சோதனை முழுமையாக வெற்றி பெற்றிருப்பதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. நகரும் வாகனத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை 300 கி.மீ தொலைவில் இருந்த குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Russia ,India ,joint venture ,Pramos , BRAMMOS missile, test, success
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...