பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கயா (பீகார்)- எழும்பூர் இடையே அதிவேக விரைவு சிறப்பு ரயில் எண் (12389) ஞாயிற்றுக்கிழமைகளில் அக்டோபர் 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில்  காலை 5.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக எழும்பூர்-கயா இடையே அதிவேக சிறப்பு ரயில் (02390)  வாரத்தில் ஆறுநாட்கள் செவ்வாய்கிழமைகளில் அக்டோபர் 27, நவம்பர் 3, 10, 17, 24 டிசம்பர் 1ம் தேதிகளில்  காலை 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு காயா சென்றடையும்.

அதைப்போன்று புவனேஷ்வர்- புதுச்சேரி இடைேய அதிவேக சிறப்பு ரயில் எண் (02898) அக்டோபர் 20, 27 நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் செவ்வாய்கிழமை பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மறுநாள் பிற்பகல் 12.40 மணிக்கு வந்தடையும்.

மேலும் புதுச்சேரி- புவனேஷ்வர் இடையே அதிவேக சிறப்பு ரயில் (02897) அக்டோபர் 21, 28 நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.55 மணிக்கு புவனேஷ்வர் சென்றடையும். மேலும் யஷ்வந்த்பூர்- கண்ணூர் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06537) அக்டோபர் 20 முதல் நவம்பர் 30ம் தேதி வரை  இரவு 8 மணிக்கு புறப்பட்டு கண்ணூர்க்கு மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று கண்ணூர்- யஷ்வந்த்பூர் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06538)  அக்டோபர் 21ம் தேதி முதல் டிசம்பர் 1ம்தேதி வரை மாலை 6.05மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும். அதைப்போன்று செகந்திரபாத்- திருவனந்தபுரம் இடையே அதிவேக சிறப்பு ரயில் (07230)  அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை தினமும் பிற்பகல் 12.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 6.50 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

மேலும் திருவனந்தபுரம்- செகந்திரபாத் இடையே அதிவேக விரைவு சிறப்பு ரயில் (07229) அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.20 மணிக்கு செகேந்திரபாத் சென்றடையும். மேலும் பீகார் மாநிலம் பரூணி - எர்ணாகுளம்- பரூணி இடையேயும், உத்தரபிரதேசம் மாநிலம் மண்டூதி- ராமேஸ்வரம்- மண்டூதி இடையேயும், கோரக்பூர்- திருவனந்தபுரம்-கோரக்பூர் இடையேயும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>