×

வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் அதிரடி மீட்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான  சுமார் 2 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலைய துறையினர் மீட்டனர். திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு  சொந்தமான வடக்கு மாடவீதியில்  வாகன மண்டபத்துடன் கூடிய காலி நிலம், கடந்த 1904ம் ஆண்டு அப்போதைய  கோயில் நிர்வாகத்தினரால் ஆண்டுக்கு 20 என நிர்ணயித்து, அலமேலம்மாள் என்பவருக்கு 99 வருடம் குத்தகைக்கு விடப்பட்டது. அந்த இடத்தை  சம்பந்தம் மற்றும்  விநாயகசுந்தரம், பாபு ஆகியோர் அனுபவித்தனர். கடந்த 2003ம் ஆண்டுடன் 99 ஆண்டு குத்தகை காலம் முடிவடைந்தது. இதையொட்டி, அந்த இடத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில், மேற்கண்ட நபர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இடம் தங்களுக்கே சொந்தம் என கூறி, இடத்தை  ஒப்படைக்க மறுத்தனர்.

இதையடுத்து, 2008ம் ஆண்டு வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில், கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2013ம் ஆண்டு கோயில்  நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட்டது.ஆனால், நிலத்தை அனுபவிப்பவர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை உரிமை கொண்டாடுபவர்களை அகற்றி, இடத்தை கோயிலுக்கே ஒப்படைக்க  வேண்டும் என கடந்த மே  மாதம் தீர்ப்பளித்தது.

கொரோனா ஊரடங்கால், 4 மாதத்துக்கு பின், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உதவி ஆணையர் ரேணுகாதேவி தலைமையில், கோயில் ஆய்வாளர் கோவிந்தராஜ், கோயில் செயல் அலுவலர் குமரன் ஆகியோர் நேற்று மேற்கண்ட பகுதிக்கு சென்று, நிலத்தை மீட்டனர். மேலும், கோயிலுக்கு சொந்தமான இடம் என  அறிவிப்பு பலகை வைத்து, சீல் வைத்தனர். மீட்கப்பட்ட கோயில் இடத்தின் மதிப்பு  சுமார் 2 கோடி. இதேபோன்று   கோயிலுக்கு சொந்தமான மேலும் உள்ள இடங்களையும்  விரைவில் சட்ட ரீதியாக மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Action recovery ,land , Action recovery of 2 crore occupied land belonging to Vedagriswarar temple
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!