×

கொரோனா தொற்று பாதிப்பால் பீகார் அமைச்சர் மரணம் : மருமகள் தேர்தலில் போட்டி

பாட்னா, :கொரோனா தொற்று பாதிப்பால் பீகார் மாநில அமைச்சர் கபில் தேவ் காமத் நேற்றிரவு காலமானார்.
பீகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முதல்வர் நிதிஷ்  குமாரின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவர் கபில் தேவ் காமத் (69). இவர் மாநில  பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு,  ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த முறை தேர்தலில் அவரது மருமகள் மீனா  காமத்தை தனது வேட்பாளராக அறிவித்தது. இந்நிலையில், அமைச்சர் கபில் தேவ் காமத்துக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் இறந்தார். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தற்போது கபில் தேவ் காமத் காலமானார். இதுகுறித்து முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘மறைந்த கபில் தேவ் காமத் பீகார் மண்ணின் மைந்தன். எனது அமைச்சரவையில் முக்கியமானவர். அவர் ஒரு திறமையான நிர்வாகி மற்றும் பிரபலமான அரசியல்வாதி. அவரது மறைவு என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியுள்ளது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். கொரோனா வழிகாட்டுதலின் கீழ் அவருக்கு மாநில அரசு உரிய மரியாதைகளுடன் தகனம் செய்ய ஏற்பாடு செய்யும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Bihar ,daughter-in-law contests election ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...