அப்துல் கலாம் நினைவிடத்தில் மலரஞ்சலி

ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 89வது பிறந்தநாள் விழா ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது. நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சமாதி முன்பு ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வீரராகவராவ் வேம்பு மரக்கன்றுகளை நட்டு, கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பில் பாம்பன் முதல் தனுஷ்கோடி வரை நெடுஞ்சாலையில், ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

Related Stories:

>