×

நெல்லிற்கான விலை உயர்ந்தும் குமரியில் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள்: இயற்கை கைகொடுக்காததால் விரக்தி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இருபோக நெல்விவசாயம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடியின்போது அதிக அளவு மகசூல் கிடைக்கும். இதனால் கும்பபூசாகுபடியைவிட கன்னிப்பூ சாகுபடியின்போது அதிக பரப்பளவில் சாகுபடி நடக்கும். மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ அறுவடை முடிந்து தற்போது கும்பபூ சாகுபடி தொடங்கியுள்ளது. கன்னிப்பூ சாகுபடி தொடங்கியபோது இயற்கை கைகொடுத்ததால் மகசூல் அதிக அளவு ஏற்பட்டது. ஆனால் அறுவடையின்போது மழை பெய்ததால், பெரும்பாலமான நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் மழை விட்டு வெயில்அடித்த நேரத்தில் அறுவடையை தொடங்கிய விவசாயிகளுக்கு நெல்மட்டுமே மிஞ்சியது. வைக்கோல்களை எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வைக்கோல்களில் கிடைக்கும் பணம் அவர்களுக்கு கிடைக்காமல்போனது.

அறுவடை செய்யப்படும் நெல்களுக்கு நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 100 கிலோ மூடைக்கு ரூ.1865ம் சன்னரகத்திற்கு(சின்ன நெல்ரகம்) ரூ.1920ம் கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கொள்முதல் ெசய்யப்படும் நெல்களுக்கு மத்திய அரசு கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி 100 கிலோ மூடை நெல்லிற்கு ரூ.1918ம், சன்னரகத்திற்கு 1970ம் கொள்முதல் விலை கொடுக்க நிர்ணயம் செய்தது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் விவசாயிகளிடம் இருந்து ெகாள்முதல் செய்யப்பட்ட நெல்களுக்கு விலை உயர்த்தி வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சிறிது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் நடந்து முடிந்த கன்னிபூ சாகுபடியில் அதிக அளவு விளைச்சல் கிடைத்தது. ஆனால் அறுவடையின்போது மழையால் வைக்கோல்களை எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் விசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் நெல்லிற்கு மத்திய அரசு கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் 100 கிலோ மூடைக்கு ரூ.53ம், சன்னரகத்திற்கு ரூ.50ம் உயர்ந்துள்ளது. இதனால் கொள்முதல்நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு நல்ல விலை கிடைத்தது. கன்னிப்பூசாகுபடி செய்யும்போது இயற்கை ஒத்துழைத்தது. ஆனால் அறுவடை செய்யும் போது இயற்கை கைகொடுக்காததால் விவசாயிகளுக்கு வைக்கோலில் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல்போனது. இதனால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்றார்

Tags : Kumari , Farmers affected by rising paddy prices in Kumari: Frustration over natural disasters
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...